Tuesday, March 8, 2011

பிரகாசமாய் சிறிது நேரம்..!!


Photo, originally uploaded by ICT_photo.
வெளிச்சங்களில்
விடையறியா
கேள்விகளின் சப்தமே
ஓங்கி ஒலிப்பதனால்
விடியலின் மீதான பிடி
தளர்ந்தே விட்டது
முற்றிலுமாய்..

தனிமையை
உணர்த்தினாலும் கூட
இருள் மட்டுமே
பிடித்திருக்கிறது..
வாடிய முகம் ஏனென்று
வட்டமிட மாட்டார்களே
சுற்றிலுமிருப்போர்..

நினைவுகள் விடாது
துரத்துவதாலோ என்னவோ
துயில் மீள
விருப்பமேயில்லை..
கனம் தாளாததால்
தலை சாய்வதில் மட்டுமே
சித்தமிப்போது..

பலர் வருவார்..
பலர் போவார்..
அது வாழ்வின் நியதி..
போகிற போக்கில்
உயிரையும் சேர்த்து
அள்ளியெடுத்து
போகக் கூடும் சிலர்..
அது தலையின் விதி..

மாற்றம் வருமென்னும்
நம்பிக்கையில்
வீழாதிருப்பார் பலர்..
மாற்றம் வந்திடுமேயென்னும்
அச்சத்தில்
வீழ முனைவார் சிலர்..

இனியாவது வாழலாமேயென்று
வாழ நினைப்பவர் அவர்..!
இது தான் தம் வாழ்வென்று
அறிந்து தெளிந்தவர் இவர்..!!

அறிந்ததால் தானோயென்னவோ
அடியாழத்தில்
துளிர்க்க தொடங்கிவிட்டன
அச்சத்தின் சுவடுகள்..!!


குறிப்பு: அநேகமாக இது என் கடைசி பதிவாக இருக்கும்..! மன்னிக்கவும், இந்த பதிவிற்கு மட்டும் கமெண்ட்ஸை டிஸ்ஸேபில் செய்திருக்கிறேன்.. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்..!!
--
.பால்.
[ இப்பதிவுகளையோ அதன் பகுதிகளையோ உங்கள் தளங்களில்/ஊடகங்களில் வெளியிட அனுமதியில்லை.. ( Copyright © Paul Arockiam | All Rights Reserved) ]
படிச்சு முடிச்சிட்டு அப்படியே போறவங்கள எல்லாம் அடிக்க ஆள் ஏற்பாடு பண்ணிருக்கேன்.. பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.. :-) பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைன்னாலும் கருத்தை சொல்லிட்டு போங்க.. இல்ல.. பிச்சு பிச்சு..!!